பாடகர் கோவன் தேச துரோக சட்டப் பிரிவில் கைது ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறதா? கலைஞர்

karunaபாடகர் கோவன் தேச துரோக சட்டப் பிரிவில் கைது; ஜனநாயகத்தின் குரல்kowanவளை நெரிக்கப்படுகிறதா? என திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மதுவினால் ஏற்படும் தீமைகளையும், சமூக அவலங்களையும், அ.தி.மு.க. ஆட்சியின் சட்ட விரோதச் செயல்களையும் கண்டித்து ஊருக்கு ஊர் பாடல்கள் மூலமாக பிரச்சாரம் செய்த மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் அவர்களை திருச்சியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேச துரோகம்), 153-ஏ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்) என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கோவனை எங்கே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படவில்லை. அவரைச் சந்திக்கவும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஜனநாயகத்தின் குரல்வளை ஜெயலலலிதா ஆட்சியில் எப்படியெல்லாம் நெரிக்கப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை. அ.தி.மு.க. அரசின் இந்த ஜனநாயக விரோதச் செயலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாக கைது செய்யப்பட்ட பாடகர் கோவனை விடுதலை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply