மாணவர்கள் மீது பொலிஸார் மோசமாக தாக்குதல் நடத்தவில்லை :பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக சிரிவர்தன

studentகொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் மீது பொலிஸார் மோசமான முறையில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக் கப்படும் குற்றச் சாட்டை பொலிஸ் தலைமையகம் நிராகரித்துள்ளது. பொலிஸார் குறைந்தபட்ச அதிகாரத்தையே பிரயோகித்ததாக தெரிவித்த பொலிஸார் ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் திரிபுபடுத்தப்பட்டே பிரசுரிக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

உயர் கல்வி அமைச்சிற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட உயர் டிப்ளோமா மாணவர்கள், பொலிஸாரினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக சிரிவர்தன, பொலிஸார் 99 வீதம் சட்டத்திற்கு உட்பட்டே செயற்பட்டதாகவும் பொலிஸாரினால் சிறு தவறு நடந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டார். பஸ்ஸில் மோதியதாலே மாணவர் ஒருவரின் தலையில் இந்தக் காயம் ஏற்பட்டதோடு மாணவி ஒருவரை பொலிஸார் தாக்குவதாக சித்தரிக்கும் புகைப்படம் பிழையாகவே சித்தரிக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைதான 39 மாணவர்களும் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பிணை வழங்குவதற்கு பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தெரிவித்த கொழும்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அதிபர் பூஜித ஜயசுந்தர இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கையொன்று கையளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான காமினி மதுரட்ட, சம்பிக சிரிவர்தன ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.

இந்த ஊர்வலத்திற்கு பொலிஸ் அனுமதி எதுவும் பெறப்படாததோடு பொலிஸாரின் கவனத்தை திசை திருப்பி வேண்டுமென்று கொழும்பில் ஸ்தம்பித நிலையை ஏற்படுத்தியதாக சம்பிக சிர்வர்தன தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஆரம்பத்தில் தெஹிவளையில் இருந்தே ஊர்வலம் வர மாணவர்கள் திட்ட மிட்டிருந்தனர்.

புலனாய்வுப் பிரிவு தகவல்படியே ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் கிடைத்தது.

முற்றாக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இதனால் கொழும்பு நகரில் முழுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. பாடசாலை முடிந்து மாணவர்களுக்கு வீடு செல்ல முடியாமல் போனதோடு அம்பியூலன்ஸ்களுக்கும் டாக்டர்களுக்கும் ஆஸ்பத்திரி செல்ல முடியாத நிலை உருவானது.

இவர்களுடன் பேசி சுமுகமாக இந்த பிரச்சினையை தீர்க்க பொலிஸார் முயன்றனர். ஆனால் மாணவர்கள் பலாத்காரமாக உயர்கல்வி அமைச்சிற்குள் நுழைய முட்பட்டதாலே பொலிஸார் அதனை தடுக்க குறைந்த பட்ச அதிகாரத்தை பிரயோகித்தனர். கண்ணீர் புகை பிரயோகித்தும் அவர்கள் கலையாததையடுத்தே தடியடி பிரயோகிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. ஆனால் ஒரு தலைபட்சமாவே அவை வெளியிடப்பட்டிருந்தன. நியாயமாக நடந்ததை வெளியிட்டிருக்க வேண்டும்.

எந்த அரச நிறுவனத்திற்கும் பலாத்கார மாக நுழைய இடமளிக்க முடியாது. மாணவர்களை கலைப்பதற்காக எடுத்த முயற்சியில் இடம்பெற்ற சிறு சிறு தவறுகளே ஊடகங்களில் பெரிதுபடுத்திக் காண்பிக்கப்பட்டது. பொலிஸார் தாக் கியதனாலன்றி பஸ்ஸில் மோதுண்டதாலே மாணவர் ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டது என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி மதுரட்ட, மாணவர்கள் முதலில் அமைதியாக ஊர்வலம் சென்றனர். மாலை 3 மணியாகும் போது மாணவர்களின் ஊர்வலத்தால் முழு கொழும்பு நகரிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. வீதித்தடைகளை உடைத்துக் கொண்டு மாணவர்கள் செல்ல முற்பட்டதாலே பொலிஸார் அதிகாரத்தை பிரயோகித்தனர் என்றார்.

பொலிஸாருக்கு எதிராக இதுவரை எதுவித முறைப்பாடும் கிடைக்கவில்லை எனவும் அவ்வாறு முறைப்பாடு கிடைத்தால் அது குறித்து விசாரணை நடத்த தயார் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸார் அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply