கருணா அம்மான் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியீட்ட வைப்பதா? இல்லையா? : அமைச்சர் பி. ஹரிசன்
கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன், தேர்தலில் போட்டியிட்டால் அவரை வெற்றியீட்ட வைப்பதா, இல்லையா? என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.நுவரெலியா பிரதேசத்தில் போபத்தலாவ, மெனிக்பாலம மற்றும் கொட்டகலை ரொசிட்டா போன்ற இடங்களில் உள்ள கால்நடை வளர்ப்பு பண்ணைகளுக்கு நேற்று அமைச்சர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கை யில்,
கருணா அம்மான் வடக்கில் தேர்தலில் போட்டியிடுவாரா, இல்லையா என்பது எமக்குப் பிரச்சினையில்லை. அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமை யைப் பெற்றிருப்பவர். அதுபோல அவர் அக்கட்சியின் உப தலைவருமாவார்.
அவரது பிரச்சினை எமக்கு தேவை யில்லை. எனினும் ஜனநாயக உரிமையின் அடிப்படையில் தேர்தலில் போட்டி யிடுவதற்கான சகல உரிமையும் அவருக்கு உள்ளது.
எவ்வாறாயினும் அவர் வடக்கில் தேர்தலில் போட்டியிட்டால் அவரை வெற்றியீட்ட வைப்பதா? அல்லது தோல்வியடையச் செய்வதா? என்பது குறித்து அங்குள்ள தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply