சிரியாவுக்கு அமெரிக்க படை ஜனாதிபதி ஒபாமா ஒப்புதல்
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இருந்தபோதிலும் அங்கு அமெரிக்க படைகள் அனுப்பி வைக்கப்பட மாட்டாது என கூறப்பட்டு வந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் நடவடிக்கையில் ஈடுபட ஜனாதிபதி ஒபாமா விரும்பாததே இதற்கு காரணம். ஆனால் இப்போது இதில் சிறிய அளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிரியாவுக்கு அமெரிக்க சிறப்பு படை அடுத்த மாதம் அனுப்பி வைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை ஜனாதிபதி ஒபாமா வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் நிருபர்களிடம் பேசும்போது, “சிரியா படைகளுக்கு பயிற்சி
அளிக்கவும், ஆலோசனை வழங்கவும், உதவிகள் செய்யவும் அமெரிக்க சிறப்பு படை அனுப்பி வைக்கப்படுகிறது. 50-க்கும் குறைவான எண்ணிக்கையிலான வீரர்கள்தான் இந்தப் படையில் இடம் பெறுவார்கள்” என கூறினார். இதேபோன்று ஈராக் நாட்டுக்கும் கூடுதலான சிறப்பு படைகளை அனுப்புவதற்கான வாய்ப்பை ஜோஷ் எர்னஸ்ட் நிராகரிக்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply