அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் புயல், மழைக்கு 6 பேர் சாவு

USA அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வீசிய புயல் மற்றும் பெய்த பெருமழைக்கு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இருநாட்களாக ஹூஸ்டன் நகரில் 30 சென்ட்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில் தொடர்மழையின் விளைவாக இங்குள்ள ஆஸ்டின் ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்ததால் அருகாமையில் இருக்கும் ஆல்வின் மற்றும் ஹூஸ்டன் நகர சாலைகளில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. 

 

இதனால், சாலை போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சில வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அங்கிருந்தவர்களை மீட்புப் படையினர் காப்பாற்றி, கரை சேர்த்துள்ளனர். மழைசார்ந்த விபத்துகளில் சிக்கி ஆறுபேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

ஹூஸ்டன் நகரில் இருந்து பல பகுதிகளுக்கு செல்லும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த 24 மணிநேரத்தில் ஹூஸ்டன் அருகேயுள்ள லா போர்ட்டே மற்றும் ஃபிரண்ட்ஸ்வுட் பகுதிகளை சூறாவளிக்காற்று தாக்கும் என உள்ளூர் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பலர் தங்களது வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply