ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலிடம்: இந்தியாவுக்கு 103-வது இடம்!

SINGAPORசர்வதேச அளவில் ஆரோக்கியமான மக்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில், சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் ஆரோக்கியமான மக்கள் கொண்ட நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி மற்றும் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.பிறப்பு, இறப்பு விகிதங்கள், மரணத்திற்கான காரணங்கள், இளைய தலைமுறையினரிடையே நிலவி வரும் புகைப்பழக்கம், அதிக கொழுப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் மற்றும் நோய்த்தடுப்பு திட்டங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு சர்வதேச அளவில் 10 லட்சம் மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 89.45 சதவீதத்துடன் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இத்தாலி ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 22.17 சதவீதத்துடன் இந்தியா 103-வது இடத்தைப் பெற்றுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply