சினாயில் நொறுங்கிய விமானத்தை சுட்டதாக ஐ.எஸ்ஸின் அறிவிப்பை எகிப்து அரசு நிராகரிப்பு
எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் விழுந்து நொறுங்கி 224 பேரை பலி கொண்ட ரஷ்ய விமான விபத்து குறித்து புலன்விசாரணைகள் ஆரம்ப மாகியுள்ளன. இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு பொறுப்பேற்றபோதும் அதனை நிராகரித்திருக்கும் எகிப்து அரசு, தொழில் நுட்பக் கோளாறே விபத்துக்கு பெரும்பாலும் காரணமாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த சம்பவம் குறித்து மேலதிக விபரம் தெரியும் வரை சினாய் தீபகற்பத்திற்கு மேலால் பறப்பதில்லை என்று எமிரேட்ஸ், எயார் பிரான்ஸ் மற்றும் லுதன்சா ஆகிய மூன்று விமான சேவைகள் அறிவித் துள்ளன. இந்த அனர்த்தத்தையொட்டி ரஷ்யாவில் நேற்று ஒருநாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிலையில் விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே பதற்றம் காரணமாக எகிப்தின் சுற்றுலா துறை பாதிக்கப் பட்டிருக்கும் சூழலில் இந்த விபத்து மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில் இந்த விமான விபத்து குறித்து எகிப்து நிர்வாகம் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளது.
எகிப்தின் சுற்றுலா தலமான ‘க்ம் அல் ந்’ய்க்கில் இருந்து ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரை நோக்கி கடந்த சனிக்கிழமை காலை பயணத்தை அரம்பித்த கொகலிமாவியா ஏர்பஸ் ஏ௩21 விமானமே சினாயில் விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் பிரச்சினை இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று எகிப்து சிவில் விமானசேவை அமைச்சர் ஹொஸ்ஸம் கமால் குறிப்பிட்டார். என்றும் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி கேட்டுக் கொண்ட தாக வெளியான முந்தைய செய்திக்கு இந்த தகவல் முரணாக உள்ளது.
இதில் எகிப்து அதிகாரிகள் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில், விமானம் தொடர்பை இழக்கும் முன்னர், விமானத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், அருகில் இருக்கும் விமான நிலையத்தில் தரையிறக்க முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மறுபுறம் விமானத்தின் நிலை குறித்து தனது கணவன் குற்றம்சாட்டி இருந்ததாக துணை விமானி செர்கை டுர்க்செவ்வின் மனைவி ரஷ்யாவில் இருந்து குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் என்.டீ.வி. தொலைக்காட்சிக்கு அவர் குறிப்பிட்டிருக்கும் தகவலில், விமானம் புறப்படும் முன்னர் தனது மகள் தந்தையுடன் பேசியதாக தெரிவித்துள்ளார். “விமானத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்” என்று குறிப்பிட்டார்.
குறித்த ஏர்பஸ் விமானத்தின் தலைமையகம் இருக்கும் பிரான்ஸில் இருந்து நிபுணர்கள் உட்பட ரஷ்ய மற்றும் பிரான்ஸின் புலன் விசார ணையாளர்களும் எகிப்து தலைமையில் இடம்பெறும் விசாரணைகளில் இணைந்துள்ளனர்.
மறுபுறம் விபத்து இடம்பெற்ற பகுதியில் சடலங்களை மீட்கும் பணிகளில் ரஷ்ய குழுவொன்று இணைந்துள்ளது. விமானம் பறப்பதற்கான விதி முறைகளை மீறியதாக குற்றம்சாட்டி கொகலிமாவியா விமான சேவைக்கு எதிராக குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
குறித்த விமானசேவை அலுவலகங்களை பொலிஸார் சோதனை யிட்டுள்ளனர். எனினும் கொகலிமாவியா விமான சேவையின் பேச்சாளர் குறிப்பிடும்போது, 18 ஆண்டுகள் கொண்ட அந்த விமானம் பறப்பதற்கு தகுதியான நிலையிலேயே இருந்ததாகவும் விமானத்தின் விமானி 12,000 மணிநேரம் பறந்த அனுபவம் கொண்டவர் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே சினாய் பிராந்தியத்தில் இயங்கும் ஐ.எஸ்ஸ{டன் கூட்டுச் சேர்ந்துள்ள ஆயுதக் குழு, தாமே கே.ஜப்.எல். 9268 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக சமூகதளத்தில் பொறுப்புகூறி உள்ளது.
எனினும் ஏர்பஸ் 321 விமானம் பறந்த உயரத்தை அவதானிக் கும்போது அதனை சுட்டு விழ்த்தும் திறன் இல்லை என நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர் என்று எகிப்து பிரதமர் ‘ரீப் இஸ்மைல் குறிப்பிட்டுள்ளார். இதனை உறுதி செய்திருக்கும் ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் மக்சிம் சொகொலொவ், விமானம் இலக்கு வைக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
விமானம் 9,450 மீற்றர் (31,000 அடி) உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோதே மாயமானதாக எகிப்து சிவில் விமானசேவை அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இத்தனை உயரப் பறக்கும் விமானத்தை தோளில் சுமக்கும் நிலத்தில் இருந்து வானை தாக்குகின்ற (மேன்பாட்) ஏவுகணையால் சுட முடியாது என்று பாதுகாப்பு நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
எவ்வாறாயினும் சினாய் தீபகற்பத்திற்கு மேலால் பறப்பதை தவிர்ப்பதாக ந்ஜர்மனியின் லுதன்சா விமானசேவை அறிவித் துள்ளது.
இந்த விமான விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவராத காரணத்தாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த விமான சேவை குறிப்பிட்டுள்ளது. இதனை பின்பற்றி ஏர் பிரான்ஸ், எமிரேட்ஸ் விமான சேவைகளும் சினாய் வான்பரப்பை தவிர்ப்பதாக சனிக்கிழமை பின்னேரம் அறிவித்தது.
விழுந்து நொறுங்கிய விமானத்தில் 25 சிறுவர்கள் உட்பட 217 பயணிகள் இருந்ததாக ரஷ்ய போக்குவரத்து அதிகார சபை குறிப்பிட்டது. தவிர ஏழு பேர் விமானப் பணியாளர்களாவர். இதில் 213 பயணிகள் ரஷ்ய நாட்டவர்கள் என்றும் நால்வர் உக்ரைனியர் என்றும் எகிப்து நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. எனினும் இதில் ஒருவர் பெலாரஸ் நாட்டவர் என்று ரஷ்யா குறிப்பிட்டது.
இதுவரை 140 சடலங்கள் மீட்கப்பட்டு கெய்ரோவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முதல்கட்ட சடலங்கள் நேற்று ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகருக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த கொர அனர்த்தத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலான சடலங்கள் ஆசனங்களிலேயே சிக்கி இருந்ததாக பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர் விபரித்துள்ளார்.
இதன்போதும் விமானம் இரண்டாக பிளந்திருப்பதோடு ஒரு பாகம் வெடித்துச் சிதறியும் மற்றைய பாகம் பாறை ஒன்றில் மோதியுமுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply