அமெரிக்காவில் உணவு விடுதி முன் துப்பாக்கி சூடு: 3 பேர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் பரவி வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமீபத்தில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஒபாமா கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கொலராடோ ஸ்பிரிங்க்ஸ் நகரில் உணவு விடுதி ஒன்றின் முன்பாக ஒரு நபர் 3 பேரை சரமாரியாக சுட்டுக்கொன்றார். அந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டிருந்தபோதே, தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர்.
அந்த நபருக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. முடிவில் அந்த நபர் கொல்லப்பட்டார். அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதின் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலராடோ ஸ்பிரிங்க்ஸ் போலீஸ் செய்தி தொடர்பாளர் கேதரின் பக்லே நிருபர்களிடம் பேசுகையில், “இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து தெரியவர இன்னும் சில மணி நேரங்கள் ஆகலாம்” என கூறினார்.
தாக்குதல் நடத்திய நபர் பற்றிய எந்தவொரு தகவலையும் தர அவர் மறுத்து விட்டார்.
கொலராடோவில்தான் அமெரிக்க விமானப்படை பயிற்சி கல்லூரி உள்ளது. ஏறத்தாழ 4½ லட்சம் மக்கள் அங்கு வசிக்கின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு தற்போது போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தாலும் பதற்றம் நிலவுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply