சகிப்புதன்மையின்மை நாட்டில் அதிகரித்துள்ளதால் மதச்சார்பின்மையை வளர்க்க வேண்டும்: ஷாரூக்கான் கருத்து

sarukhaneநாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும், சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும் கூறி எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், திரைப்பட இயக்குநர்கள் தங்களுடைய விருதுகளை திருப்பி அளித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் சகிப்புதன்மையின்மை தீவிரமடைந்து வருவதாக, பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் மதம், படைப்பாற்றல் தொடர்பான சகிப்புத்தன்மை குறைந்து வருவதால், நாட்டுக்குதான் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார். தனது 50வது பிறந்தநாளை முன்னிட்டு இணையதளத்தில் ரசிகர்களிடையே உரையாடிய போது சில கருத்துக்களை அவர் பதிவு செய்தார்.

 

அப்போது ஷாரூக்கான் கூறியதாவது: 

 

”இந்தியாவில் சகிப்புதன்மையின்மை தீவிரமடைந்து வருகிறது. நம்முடைய நாடு வளர விரும்பினால், இந்தியாவில் நிலவும் பல்வகையான கலாச்சரங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அனைத்து மதங்களும் சமமானது என்று நாம் நம்பவில்லை என்றால் நாடு சக்தி வாய்ந்ததாக இருக்க முடியாது.

 

மதம், படைப்பாற்றல் தொடர்பான சகிப்பின்மையைக் களைந்து, நாட்டை வளர்ச்சி அடைய செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் மதச்சார்பின்மையை வளர்க்க வேண்டும். இல்லை என்றால் தேசப்பற்றின் பெயரால் மோசமான செயல்கள் நடக்கும்.

 

சகிப்புத்தன்மையின்மைக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவாக எனக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதினை திருப்பி அளிக்க தயார்.”

 

சிவசேனா கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், ஷாரூக்கானின் கருத்து முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply