அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி, பிரதமருடன் இவ்வாரம் கலந்துரையாடல் : மாவை சேனாதிராஜா
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வாரம் பேச்சு நடத்தவுள்ளதாகவும், இதன்போது கைதிகள் விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
பாராளுமன்றம் இந்த வாரம் கூடும் வேளை பல சட்டங்கள் கொண்டுவரப்படும். இத்தகைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இறுதி முடிவை எடுக்க வலியுறுத்தும். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் முக்கிய கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாகவும் குறிப்பாக ஜனாதிபதியுடனான முதற் சந்திப்பு முயற்சி அவர் தாய்லாந்து சென்றதால் தவிர்க்கப்பட்டது .அந்த குறித்த சந்திப்பு இந்த வாரம் நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்
இதன் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு மற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்பை வழங்குதல் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளோம்.ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாம் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் படி மக்களுக்கு சொந்தமான நிலங்கள் மக்களிடம் ஒப்படைப்பது தொடர்பில் திட்டவட்டமாகவே இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply