பிரிட்டிஷ் ஆவண காப்பகத்தில் 87 ஆண்டுகளுக்கு முந்தைய டிஸ்னி திரைப்படம் கண்டுபிடிப்பு

disnyஊமைப் படங்களின் காலகட்டத்தில் திரைக்கு வந்த டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படம் சுமார் 87 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டிஷ் திரைப்பட நிறுவனத்தின் ஆவண காப்பகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.‘ஸ்லெய் பெல்ஸ்’ என்ற இந்தப்படம் டிஸ்னியால் உருவாக்கப்பட்ட மிக்கி மவுஸுக்கும் முன்னோடியான ஆஸ்வால்டு ‘த லக்கி ரேபிட்’-டை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டுள்ளது. ஆறு நிமிட படமான இது இத்தனை ஆண்டுகளாக திரைப்படச்சுருளில் மிஞ்சியிருப்பது ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும்.

ஸ்லெய் பெல்ஸ் திரைப்படம் பிரிட்டிஷ் திரைப்பட நிறுவனத்தின் திரையரங்கில் வரும் டிசம்பர் 12-ம் தேதி திரையிடப்பட இருக்கின்றது. ஊமைப்படங்களின் காலகட்டமான 1928-ம் ஆண்டு வெளிவந்த ஸ்லெய் பெல்ஸ், டிஸ்னியின் படைப்புகளின் ஆரம்பகட்டத்தை நம் கண்முன் காண்பிக்க வல்லது.

அந்த காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு, தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்த டிஸ்னியின் ஒப்பில்லா ஆற்றல், ஸ்லெய் பெல்ஸின் மூலம் இளம் தலைமுறைக் கலைஞர்களுக்கு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply