வாஷிங்டனில் அமெரிக்க எம்.பி.க்கள் தீபாவளி கொண்டாட்டம்

deepawaliஇந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 100 கோடி பேர் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவிலும் ஆண்டுதோறும் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் தீபாவளி சிறப்பு கொண்டாட்டங்கள் நடந்தது. இந்திய வம்சாவளியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த விழாவில் சுமார் 30 அமெரிக்க எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

விழாவுக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதிநிதிகள் சபையின் ஒரே இந்திய வம்சாவளி உறுப்பினரான அமி பெரா, ‘இந்தியா, அமெரிக்கா இடையிலான நல்லுறவுக்கு, இந்திய வம்சாவளியினர் முக்கிய பங்காற்றி வருகின்றனர்’ என்று கூறினார்.

இந்த விழாவில் செனட் சபை உறுப்பினர்களான மார்க் வார்னர், டிம் கெயின், வெளிவிவகார கமிட்டி தலைவர் எட் ராய்ஸ், ஜோ கிரவ்லி உள்ளிட்ட பல்வேறு எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும், தீபாவளி பண்டிகை நினைவாக அமெரிக்காவில் தபால் தலை வெளியிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply