காணாமற்போனோர் குறித்து ஆராய ஐ.நா விசேடகுழு இலங்கை வருகை
காணாமற் போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் குறித்து ஆராயும் ஐக்கிய நாடுகள் சபை செயற் குழுவின் விசேட பிரதிநிதிகள் எதிர்வரும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை வரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே நேற்று தெரிவித்தார். காணாமற் போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை விரிவாக ஆராயும் இக்குழு அது குறித்த தமது அறிக்கையினை 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப் பிக்குமென்றும் அவர் கூறினார்.
இதேவேளை இக்குழு காணாமற் போனோர் தொடர்பில் ஆராய்ந்த பர ணகம குழுவின் தலைவரை சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருப்பதாகவும் அவர் தெரி வித்தார்.
காணாமற் போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள எதிர்கால செயற்பாடுகளுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கும் உதவி செய்யும் நோக்கில் மனிதாபிமான அடிப்படை யிலேயே இக்குழுவின் விஜயம் அமைய வுள்ளதாக சுட்டிக்காட்டிய கொலன்னே, குற்றவிசாரணை மேற்கொள்வது இவர்க ளின் நோக்கமல்ல என்றும் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மா நாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.
காணாமற் போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் செயற்குழுவின் ஐ. நா. உப தலைவர் பேர்னார்ட் டூஹெ ய்ம் தலைமையில் ஐந்து பிரதிநிதிகளடங்கிய குழுவே திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளது. இக்குழுவானது எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருக்கும். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே மேற்படி ஐ. நா. பிரதிநிதிகள் குழுவின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.
மேலும் இக்குழு கொழும்பில் 05 நாட்களும் வெளி மாவட்டங்களில் ஏனைய நாட்களிலும் தங்க ஏற்பாடா கியுள்ளது. இதன்படி எதிர்வரும் 09, 10, 16, 17, 18 ஆகிய திகதிகளில் கொழும் பிலும் ஏனைய நாட்களில் யாழ்ப்பா ணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக் களப்பு, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை மற்றும் காலி ஆகிய பிரதே சங்களிலுமிருந்து இக்குழு செயற்பட வுள்ளது.
சட்டம் ஒழுங்கு, நீதி, பாதுகாப்பு, மீள்குடியேற்றம் ஆகிய அமைச்சுக்களின் முக்கிய அதிகாரிகள், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் முக்கியஸ்தர்கள், இராணுவம் மற்றும் கடற்படையின் உயர் அதிகாரிகள், பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாண ஆளுநர்கள், வடக்கு மற்றும் கிழக்கின் முதலமைச்சர்கள் ஆகியோரை இக்குழு சந்தித்து உரையாடும்.
மேற்படி ஐ.நா. செயற்குழுவானது இலங்கை அரசாங்கத்துக்கு நீண்டகால அடிப்படையில் முன்வைத்த 12 ஆயிரத்து 341 விசாரணைகளில் 6 ஆயிரத்து 590 விசாரணைகள் நிறைவடைந்திருப்பதாக கூறிய அவர் எஞ்சியவற்றுள் சுமார் 4 ஆயிரத்து 57 விசாரணைகள் 1991 ஆம் ஆண்டிற்கு முற்பட்டவை என்றும் குறிப்பிட்டார்.
காணாமற் போனோர் மற்றும் காணா மலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய் வதற்காக 1980 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இச் செயற்குழு நிறுவப் பட்டது. இக்குழு தமக்கு கிடைக்கும் முறைப்பாடுகளை குறித்த அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தி பின்னர் அதன் செயற்பா டுகளை ஆராய்வதுடன் எதிர்கால திட்டங் களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்.
அதே போன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தா ருக்கும் உதவிகளை செய்வதன் மூலம் அரசாங்கத்துக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத் தாருக்குமிடையே பேச்சுவார்த்தை களை நடத்துவதற்கான பாலமாக செயற் படுமே தவிர குற்ற விசாரணைகளில் ஈடு படாது என்றும் கொலன்னே விளக்க மளித்தார்.
இக்குழு இலங்கை வருவது இது முதற் தடவையல்ல. இதற்கு முன்னரும் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 1991, 1992, 1997 ஆம் ஆண்டுகளில் இக்குழு இலங்கை வந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு இக்குழுவி னரை இலங்கைக்கு அழைக்க தீர்மா னிக்கப்பட்டது. எனினும் திகதி நிர்ணயிக் கப்படவில்லை. 2015 ஆகஸ்ட் மாதம் இக்குழுவை அழைக்க தீர்மானித்த போதும் பொது தேர்தல் காரணமாக நவம் பருக்கு இது ஒத்திவைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
விஜயத்தின் இறுதி நாளான 18 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு இவர்கள் ஐ. நா. தலைமையகத்தில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தவுள்ளமை குறிப் பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply