இலங்கையர் வெளிநாட்டில் சம்பாதிக்கும் வருமானத்திற்கு வரி விலக்களிப்பு
புதிய அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதார கொள்கைத் திட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. மூன்றாவது பரம்பரையை இலக்குவைத்ததாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் ஊடாக கடந்த ஆட்சியினால் வீழ்ச்சியடைந்த எமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் நாட்டை முன்னேற்றவும் அவசியமான பல வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மூன்றாவது பரம்பரைக்கான பொருளாதார கொள்கையை இலக்கு வைத்ததாகவே 20ஆம் திகதி புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்படும் எனவும், 2023ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் நிறைவடையும் நிலையில் ஆசியாவின் பலம்வாய்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட இராச்சியமாக மாறுவதற்கு இலங்கைக்கு அவகாசம் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
நேற்று பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. வாய்மொழி மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் புதிய அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதாரக் கொள்கைத் திட்டத்தை பிரதமர் பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிற்பகல் 1.55 மணி முதல் சுமார் ஒரு மணித்தியாலங்கள் பிரதமர் உரையாற்றியிருந்தார். அரசின் பொருளாதார கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு.
* 10 இலட்சம் தொழில் வழங்கும் திட்டம் 5 வருடத்தில் பூர்த்தி
* கல்வி, சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல்
* 10 வருடங்கள் அரச காணிகளில் வாழ்வோருக்கு நிரந்தர உறுதி
* நகர், நகரை அண்மித்த பகுதிகளில் வாழ்வோருக்கு மாடி வீட்டுத் திட்டம்
* நெல் கொள்வனவுக்கு புதிய முறை, விவசாய காப்புறுதியும் அறிமுகம்* காலத்துக்கேற்ற பொருத்தமான தேசிய ஓய்வூதிய முறை
* ஐந்து வருட காலத்தில் கிராமிய நகர மற்றும் நகரை அண்டிய பிரதேசங்களில் ஐந்து இலட்சம் வீடுகள் நிர்மாணிக்க நடவடிக்கை
* தற்காலத்துக்குப் பொருத்தமான வகையில் புதிய தேசிய ஓய்வூதிய முறை அறிமுகம்
* நெல் கொள்வனவு நடவடிக்கைகள் முழுமையாக புனரமைக்க நடவடிக்கை. விவசாய உற்பத்திகளுக்கு காப்புறுதி முறை அறிமுகம்
* முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வரிச் சலுகைகள் குறித்து மீளாய்வு குறைந்த வரி அறவிடும் நாடாக மாறுவதே இலக்கு
* இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுடன் வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்து. ஜீ.எஸ்.பி சலுகை ஊடாக ஐரோப்பிய சந்தை வாய்ப்புக்களை அதிகரிக்க நடவடிக்கை
* உலகில் முதல் தரமான சேவைகள் மற்றும் வசதிகள் வழங்கும் நகரமாக மேல்மாகாணத்தை மாற்றுதல்
* பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக் கணினிகளைக் கொள்வனவு செய்வதற்கு மூன்றுவருட வட்டியில்லா கடன்
* வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வகையில் விமான சேவைகளுக்கு முன்னுரிமை
* நாட்டில் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தி துரித அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு கிடைத்துள்ள இந்தப் பொன்னான சந்தர்ப்பம் மீண்டும் கிடைக்காது.
* எதிர்வரும் இரண்டு வருட காலத்தில் பொருளாதார அரசியல், சமூக, கல்வி மற்றும் சுகாதார துறைகளை பலப்படுத்தி மேம்படுத்துவதற்கு நடவடிக்கை
* மந்த கதியான உலகப் பொருளாதார அபிவிருத்தி சூழலில் இலங்கையின் பொருளாதாரத்தை நடுநிலையாக பேணுதல்
* பொருளாதார இலக்குகளை அடைவதற்காக சாதகமான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பு
* கடன்சுமையைக் குறைத்து நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நம்பகரமான நடவடிக்கை முன்னெடுப்பு
* வியாபாரத் துறையின் நம்பகத் தன்மையை பலவீனப்படுத்தும் எதிர்காலத்தை இலக்குவைத்த வரிகளை இரத்து செய்தல்
* முதலாம் பரம்பரையை இலக்குவைத்து ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் சமூக பொருளாதார புனரமைப்பு அறிமுகம். இரண்டாவது பரம்பரைக்கான பொருளாதார புனரமைப்பு ஆர்.பிரேமதாசவின் ஆட்சியில் அறிமுகம். பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் மூன்றாவது பரம்பரைக்கான பொருளாதார புனரமைப்பு செயற்றிட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் அறிமுகம்.
* அரச தொழில்முயற்சிகளை முன்னேற்ற முழுமையான அரசுக்குச் சொந்தமான தனியார் நிறுவனமொன்றை ஸ்தாபித்தல்
* உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை
* ஊழியர்சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றை ஒன்றிணைத்து தேசிய ஓய்வூதிய பணிக்கொடை நிதியம் என்ற பெயரில் புதிய நிதியம் உருவாக்குதல். 1.7 ட்ரில்லியன் ரூபா சொத்துக்களை இந்த நிதியத்தின் கீழ் கொண்டுவருதல். அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தேவையானவாறு இதிலுள்ள நிதியை வீணடிக்க இடமளிக்கப்பட மாட்டாது.
* மத்திய வங்கியின் பொறுப்பிலிருந்து ஊழியர் பொறுப்பு நிதியம் மற்றும் பங்கு பரிவத்தனை பொறுப்புக்களை அகற்றுதல்
* சகல அரசாங்க கொள்வனவுகள், கேள்விப் பத்திரங்கள் அனைத்தையும் கையாள மத்திய கொள்முதல் செயலக அலுவலகம் ஒன்றை ஸ்தாபித்தல்
* விவசாயிகளின் பொருளாதார மேம்பாடு, கிராமிய பொருளாதார மேம்பாடு என்பவற்றுக்கென குறுங்கால துரித அபிவிருத்தி வேலைத்திட்டம்
* கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த கிராம அரச அபிவிருத்தி கேந்திரங்கள் 2005 ஸ்தாபிப்பு
* விவசாய உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக முழுமையான அதிகாரம் கொண்ட தேசிய விவசாய விநியோக அதிகாரசபையை நிறுவுதல்
* சிறிய மட்டத்திலிருந்து பாரிய மட்டம்வரை விவசாயத் துறையில் ஈடுபடுபவர்களுக்கு உச்ச நிவாரணங்கள் மற்றும் வசதிகள்
* அரசாங்கம் பொறுப்பேற்ற தனியார் தொழில்முயற்சிகளை மீள வழங்குவது குறித்து மீளாய்வு
* முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வரிச் சலுகைகள் குறித்து மீளாய்வு குறைந்த வரி அறவிடும் நாடாக மாறுவதே இலக்கு
* தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் இடையூறுகளை நீக்க நடவடிக்கை
* தொழில்முயற்சியாளர்களுக்கு 2016 முதல் வரிச்சலுகை
* இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுடன் வர்த்தக உடன்படிக்கை களில் கைச்சாத்து. ஜீ.எஸ்.பி சலுகை ஊடாக ஐரோப்பிய சந்தை வாய்ப்புக்களை அதிகரிக்க நடவடிக்கை
* உலகில் முதல் தரமான சேவைகள் மற்றும் வசதிகள் வழங்கும் நகரமாக மேல்மாகாணத்தை மாற்றுதல்
* ஒரு நாளைக்கு 40 முதல் 50 டொலர்கள் செலவிடுவதற்குப் பதிலாக 150 முதல் 200 செலவிடும் சுற்றுலாப் பயணிகளை அழைப்பதற்கு நடவடிக்கை
* வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வகையில் விமான சேவைகளுக்கு முன்னுரிமை
* மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பவற்றை வருமானம் ஈட்டும் பயனுள்ள நிறுவனங்களாக மாற்ற ஏற்பாடு
* யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களை முன்னேற்று வதற்கான 2016ஆம் ஆண்டில் உதவி வழங்கும் மாநாடொன்றை நடத்துவது குறித்து ஜப்பானுடன் பேச்சுவார்த்தை
* உயர்தரம் வரை பாடசாலை கல்வியை கட்டாயமாக்குவோம். ஒரு வகுப்புக்கான மாணவர்தொகையை 35 ஆக மட்டுப்படுத்தல்
* பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளைக் கொள்வனவு செய்வதற்கு மூன்றுவருட வட்டியில்லா கடன்
* சகல பல்கலைக்கழகங்களிலும் இலவச வைபை வசதி
* பல்கலைக்கழகம் நுழையாத உயர்தர வகுப்பில் சித்தியடைந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வவுச்சர் முறையை அடுத்த வருடம் முதல் பரீட்சார்த்தமாக ஆரம்பித்தல்
*அறிவு மற்றும் திறமைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வரி நீக்கம் முதற்கட்டமாக புத்தகம், விளையாட்டுப் பொருட்களுக்கான வரி நீக்கம்
* உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்கும் வேலைத்திட்டத்தை உடனடியாக செயற்படுத்தல். உழைக்கும் தாய்மார் அடங்கலான சகல பெண்களினதும் வருமானம் வாழ்க்கைத்தரம் என்பவற்றை மேம்படுத்த நடவடிக்கை.
* சகலரையும் திருப்திப்படுத்தும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல். அபிவிருத்தியின் பலன்கள் பகிர்ந்து செல்வதில் உள்ள முரண்பாட்டைக் கட்டுப்படுத்தும் பொருளாதாரம். நிரந்தர அபிவிருத்திக்கு வழியமைக்கும் பொருளாதாரமே அரசாங்கத்தின் இலக்கு
* மூன்றாவது பரம்பரைக்கான பொருளாதார கொள்கையை இலக்கு வைத்ததாகவே 20ஆம் திகதி புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத்திட்டம் முன்வைப்பு.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply