சாக்ஸபோனை உருவாக்கிய அடோல்ப் சாக்ஸின் 201-வது பிறந்தநாளை தனது டூடுலின்மூலம் கொண்டாடும் கூகுள்
பெல்ஜியம் நாட்டில் கடந்த 1814-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி அண்டோனி ஜோசப் அடோல்ப் சாக்ஸ் பிறந்தார். புல்லாங்குழல் மற்றும் கிளாரினட் வாசிக்கும் இசைக்கலைஞரான இவர் தனது இளம்வயதிலேயே சாக்ஸபோனை உருவாக்கினார். இசைக்கருவிகளை உருவாக்கும் பெற்றொருக்கு மகனாகப் பிறந்த சாக்ஸ், தனக்கு பிடித்த புல்லாங்குழல் மற்றும் கிளாரினட் ஆகிய இரண்டு இசைக்கருவிகளையும் தனது பதினைந்து வயதில் ஒன்றாக்கி ஒரு போட்டியில் பங்கேற்றார்.
பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்ட சாக்ஸ் தனது இருபத்து நான்கு வயதில் தானே உருவாக்கிய ‘பேஸ் கிளாரினட்’-ன் காப்புரிமத்தை 1840-ம் ஆண்டில் பெற்றார்.
இவரது மறைவுக்குப் பின்னர் அமெரிக்கா போன்ற நாடுகளில், ‘ஜாஸ்’ மற்றும் ‘ராக் அண்டு ரோல்’ போன்றவற்றில் சாக்ஸபோன் முக்கியப் பங்காற்றி இந்த இசைக்கருவியின் அருமையை உலகறிய செய்தது.
சாக்ஸபோனுடன் இவர் சாக்ஸ்ட்ரோம்பா, சாக்ஸ்ஹார்ன் மற்றும் சாக்ஸ்டியூபா போன்றவற்றையும் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply