இந்தியாவுடன் போர் தொடுக்க விருப்பமில்லை: நட்புடன் இருக்கலாம் என்கிறார் நவாஸ் ஷெரீப்

SARIFஇந்தியாவுடன் போர் தொடுக்க விருப்பமில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்ததாக அங்குள்ள ஊடகங்களில் இன்று செய்தி வெளியாகியுள்ளது. இஸ்லாமாபாத்தில் நேற்று அந்நாட்டு ஜனாதிபதி மம்னூன் ஹூசைனை சந்தித்ததை குறித்து பிரதமர் நவாஸ் ஷெரீப் தி நேஷன் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ‘‘இந்தியாவுடன் நட்புடன் இருக்கவே பாகிஸ்தான் விரும்புகிறது. அனைத்து அண்டை நாடுகளுடன் இணைந்து வளர்ச்சி அடையவே விரும்புகிறோம்.

மேலும், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கூறி வருகின்றன. இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க பாகிஸ்தான் எப்போதும் தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்புக்கு பிறகு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் நவாஸ் ஷெரீப்- ஜனாதிபதி மம்னூன் ஹுசைனும் உள்நாட்டு நிலவரங்கள் மற்றும் அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நட்புறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply