தீவிரவாதிகளுக்கு உதவியதாக அமெரிக்காவில் இரு இந்தியர்கள் கைது
இந்திய சகோதரர்களான யாஹ்யா பரூக் முகமது (வயது 37), இப்ராகிம் ஜூபைர் முகமது (36) மற்றும் வேறு நாட்டைச் சேர்ந்த ஆசிப் அகமது சலீம் (35), சுல்தான் ரூம் சலீம் (40) ஆகிய 4 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு உதவியதாக நேற்று குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. இவர்கள் அனைவரும் அல்கொய்தா தலைவர் அன்வர் அல் அவ்லாகிக்கிற்கு நிதி உதவி அளித்ததாக அமெரிக்காவின் மத்திய நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நான்கு பேரில் இரண்டு பேரை அந்நாட்டு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் இந்தியர் ஆவார். இப்ராகீம் ஜுபைர் முகம்மதுவை டெக்ஸாஸ் நகரில் போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல் சுல்தான் என்பவர் ஓஹியோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 4 பேரிடம் இருந்தும் உதவிகள் பெற்றதாகக் கூறப்படும் அல்கொய்தா தீவிரவாதி அன்வர் அல் அவ்லாகி (படத்தில் காணப்படுபவர்) 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply