25 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மரில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு: வரிசையில் நின்று மக்கள் ஓட்டு பதிவு
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த 25 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. எனவே, அங்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை. தற்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.664 இடங்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு நடைபெறும் தேர்தலில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஆளும் யு.டி.எஸ்.பி. கட்சிக்கும், எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூ கியூவின் என்.எல்.டி. கட்சிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் 90 கட்சிகளை சேர்ந்த 6 ஆயிரம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலை தொடர்ந்து இன்று ஓட்டு பதிவு தொடங்கியது.தலைநகர் யங்கூன் உள்பட அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் பொது மக்கள் ஆர்வத்துடன் கியூவில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஓட்டு பதிவின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வாக்கு சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த தேர்தலில் எதிர்க் கட்சி தலைவர் ஆங் சாங் சூ கியூவின் என்.எல்.டி. கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply