இந்தியாவின் பெருமைமிக்க கோஹினூர் வைரத்தை திருப்பியளிக்க கோரி இங்கிலாந்து ராணி மீது வழக்கு

dimonஇங்கிலாந்தில் இருக்கும் இந்தியாவின் பெருமைமிக்க 104 கேரட் கோஹினூர் வைரத்தை திருப்பியளிக்க கோரி அந்நாட்டு ராணி மீது வழக்கு தொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோஹினூர் வைரம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய சுரங்கத்தில் தோண்டியெடுக்கப்பட்டது. இது பின்னர் பல கைகளுக்கு மாறி, இந்தியா இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்தபோது, அப்போது மகாராணியாக இருந்த விக்டேரியாவுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டு, பிறகு இங்கிலாந்து அரசியின் சொத்தாக மாறியது. தற்போது இந்த வைரம் பொதுமக்களின் பார்வைக்காக லண்டன் டவரில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சொத்தான கோஹினூர் வைரத்தை திருப்பியளிக்க கோரி இங்கிலாந்தின் தற்போதைய ராணி இரண்டாம் எலிசபெத் மீது அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இந்தியாவை சேர்ந்த சில தொழில் அதிபர்களும், நடிகர்களும் முடிவு செய்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply