மலரும் தீபத் திருநாளில் தமிழ் மக்களின் வாழ்வில் நிலவும் துன்பங்கள் மறைந்து நல் ஒளி பிறக்க இறைவனை பிரார்த்திப்போம் தீபாவளி செய்தியில் : ப.உதயராசா

uthayanமலரும் தீபத் திருநாளில் தமிழ் மக்களின் வாழ்வில் நிலவும் துன்பங்கள் மறைந்து நல் ஒளி பிறக்க இறைவனை பிரார்த்திப்பதாக ஸ்ரீரெலோ கட்சயின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தமது தீபாவளி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மலரும் தீபாவளி திருநாளில், சிறையில்; வாடும் அரசியல் கைதிகளில் விடுதலை செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற அனைவரும் பிரார்த்திப்போமாக.
தமிழ் மக்கள் தமது உறவுகளை இழந்தும், தாய்மார்கள் தமது பிள்ளைகளை பறிகொடுத்தும், இருண்ட வாழ்க்கையில் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், விதவைப் பெண்கள் மற்றும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய மக்கள் அனைவரும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென்பதுடன், தமது வாழ்க்கையை இழந்து, வாழ முடியாமல் வாழும் எமது உறவுகளின் வாழ்விலும் நல்லொழி மலர வேண்டும்
வேலை வாய்ப்புக்களை தேடும் இளைஞர்கள், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்பதுடன், இத்தீபாவளியினை தாம் தம் உறவுகளுடன் இணைந்து சந்தோசமாக விளக்கேற்றி கொண்டாடலாம் என எதிர்பாத்திருந்த அரசியல் கைதிகளிற்கும் அவர்களின் குடும்பத்திற்கும் இத்தீபாவளியானது கறுப்பு தீபாவளிகாவே அமைகின்றது.
அதேபோல் தீபாவளிக்கு முன்னர் தமக்கு போனஸ் கிடைக்குமென எதிர்பார்த்திருந்த மலையக தோட்ட தொழிலாளர்களிற்கும் இவ் நல்லாட்சி அரசு ஏமாற்றத்தினையே வழங்கியுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் மலையக மக்களின் விடியலிற்கும் குரல் கொடுக்க அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் செயற்படவேண்டுமென இத்தருணத்தில் கோரிக்கைவிடுவதுடன்
அனைத்து தமிழ் மக்களின் வாழ்விலும், இத்தீபத் திருநாளில், இறைவனின் அருளினால், மக்களின் வாழ்வில் ஒளி பிறக்க தமது நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்;.

077-1242732 ஊடகச்செயலாளர்
எஸ்.அஞ்சனன்

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply