எகிப்தில் சிக்கித்தவித்த 11 ஆயிரம் சுற்றுலா பயணிகள் ரஷ்யா திரும்பினர்
எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து, கடந்த மாதம் 31–ம் தேதி ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள், 7 ஊழியர்களுடன் இன்று புறப்பட்டுச் சென்ற ரஷ்ய பயணிகள் விமானம், 23 நிமிடங்களில் மத்திய சினாய் தீபகற்பத்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நெகேல் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டது. இந்தக் கோர விபத்தில், விமானத்தில் பயணித்த 224 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். ஆனால் அதை ரஷ்யாவும், எகிப்தும் நிராகரித்து விட்டன.
இந்த விபத்தின் பின்னணி என்ன என்பது, தற்போது வரை உறுதி செய்யப்படாத நிலையில், ரஷ்யாவில் இருந்து இயக்கப்படுகிற அனைத்து விமான சேவைகளையும், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் நிறுத்தி வைத்துள்ளார். இதன் காரணமாக எகிப்து நாட்டில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷிய சுற்றுலாப்பயணிகள் சிக்கி தவித்து வந்தனர்.
முதற்கட்டமாக அவர்களில் 11 ஆயிரம் பேர் ரஷ்யாவிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், இனி வர இருக்கும் நாட்களில், மற்றவர்களும் படிப்படியாக அழைத்து வரப்படுவார்கள் என்றும் ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply