வங்காள தேசத்தில் சிறுவர்கள் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை

Bangladesh வங்காள தேசத்தில் சில்ஹெட் பகுதியை சேர்ந்தவன் கமியுல் அலாம் ரஜோன் (13). இவன் அங்கு ரோட்டில் நிறுத்தியிருந்த சைக்கிள் ரிக்ஷாவை திருடியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.அதை தொடர்ந்து 13 பேர் கும்பல் அவனை பிடித்து கட்டி வைத்து இரும்பு கம்பியால் அடித்தனர். அப்போது வலி தாங்காமல் அந்த சிறுவன் குடிக்க தண்ணீர் கேட்டும் தர மறுத்து விட்டனர். இந்த நிலையில் அவன் பரிதாபமாக இறந்தான். இக்காட்சியை செல்போனில் வீடியோ எடுத்து அதை இணைய தளத்தில் வெளியிட்டனர்.இச்சம்பவம் வங்காள தேசத்தில் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி நாடு முழுவதும் பேரணிகள் நடந்தன. அதை தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து 13 பேரை கைது செய்தனர்.இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர்களில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 6 பேருக்கு ஒரு ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.மற்றொரு சிறுவன் கொலை வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சில்ஹெட் பகுதியை சேர்ந்தவன் ரகிப் ஹவ்லாதர் (13). இவர் ஒரு கார் கம்பெனியில் வேலை பார்த்தான்.அங்கு அவனை உடன் வேலை பார்த்த 2 மெக்கானிக்குகள் அடித்து துன்புறுத்தி கொலை செய்தனர். இதனால் படுகாயம் அடைந்த அவன் பரிதாபமாக இறந்தான்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 கார் மெக்கானிக்குகளுக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply