விமானக்குழுவினர் வேலை நிறுத்தம்: லுப்தான்சா நிறுவனத்தின் 929 விமானங்கள் ரத்து

Lufthansa ஜெர்மானிய விமான நிறுவனமான லுப்தான்சாவில் பணிபுரியும் விமான குழுவினரின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக அதன் விமான சேவைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக, நேற்று மட்டும் 929 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சுமார் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் லுப்தான்சா அறிவித்துள்ளது. கடந்த 7-ம் தேதி தொடங்கிய விமான குழுவினரின் வேலை நிறுத்தம் இன்னும் ஒரு வாரம் வரை தொடரும் என அவர்களின் தொழிற்சங்கம் அறிவித்த நிலையில், விமான சேவைகள் ரத்தாவது குறித்து லுப்தான்சா அறிவித்துள்ளது.  

 

இந்த வேலை நிறுத்தத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள லுப்தான்சா, இதற்கு முன்னர் நடைபெற்ற வேலை நிறுத்தத்தின் போது ஏற்பட்ட இழப்புகளுக்காக, தொழிற்சங்கத்தின் மீது வழக்கு தொடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply