அரசியல் கைதிகளையும் விடுதலை செய்து சோபித தேரருக்கு அஞ்சலி செலுத்துங்கள் : ஆணந்தசங்கரி
அரசாங்கம் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்து, மாதுளுவே சோபித தேரருக்கு அஞ்சலி செலுத்துவதற்கான வாய்ப்பினை வழங்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆணந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். நாச்சிமார் கோவில் பகுதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இறந்து போன மாதுளுவே சோபித தேரர் எந்த விடயத்திற்கு அரசாங்கம் நியாயமற்ற முறையில் நடக்கின்றதோ, அந்த விடயத்திற்கு நியாயம் தேடுபவராக இருந்தவர்.
ஆவரின் இறப்பு மிகவும் கவலைக்கிடமானது இனப்பிரச்சினைக்கு தீரவு கிடைக்க வேண்டுமென மிக தீவிரமாக போராடியவர். நுல்ல நியாயவாதியாக திகழ்ந்தவர். நூட்டினை இரண்டாக பிரிக்க வேண்டுமென்ற விடயத்தினை தவிர வேறு எந்த உதவி தேவையாக இருந்தாலும் செய்வதற்கு தான் முன் நிற்பேன் என்று கூறியவர்.
ஆவரின் எதிர்பார்ப்பு நிறைவடையவில்லை. யார் யார் என்னென்ன செய்ய வேண்டுமென்று நினைத்தார்களோ, அது செய்யவில்லை.
ஆரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சோபித தேரரின் இணக்கம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு இருந்திருக்கவேண்டும்.
எமது இளைஞர்கள் பழைய மாதிரி போராட்டங்களில் இறங்கி விட்டார்கள். சாகும் வரைக்கும் உண்ணாவிரதம் இருக்க வேண்டுமென்று இருப்பவர்களும் இருக்கின்றார்கள். எப்போ நான் தப்பிப் போவேன் என்று நினைப்பவர்களும் இருக்கின்றார்கள்.
பகுதி பகுதியாக விடுதலை செய்யும் போது ஆபத்து உருவாகும். ஒருதர் வெளியில் செல்லும் போது மற்றவர்கள் வேதனைப்படவும், அவர்கள் மீது வெறுப்புக் கொள்ளும் சந்தர்ப்பத்தினையும் அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள், ஏதாவது காரணம் காட்டி வெளியில் செல்ல முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செல்லாவிட்டால், முயற்சி வீணாகி விடும். பேரியளவிலான ஆதங்கத்தினை அனைவரினது உள்ளத்திலும் ஏற்படுத்தி விடும். முதற்கிடைக்கும் சந்தர்ப்பத்தினை அனைவரும் ஏற்றுக்கொண்டு, செல்வோம் என்று திடகாத்திரமான முடிவு எடுக்க வேண்டுமன்றும் தனது ஆலோசனையினையும் தெரிவித்தார்.
சோபித தேரரின் இறப்பு அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சாதகமான ஒரு அங்கமாக அமைய வேண்டும். ஏங்கெங்கு அநியாயம் நடக்கின்றதோ அதற்கு எல்லாம் நியாயம் கேட்க வேண்டுமென்று தனது பயணத்தினை ஆரம்பித்திருந்தார்.
சோபித தேரரின் மரணத்தினை அகால மரணம் என்று சொல்ல முடியாது. சோபித தேரரின் விருப்பம் போன்று, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆரசியல் கைதிகள் விடுதலை செய்து சோபித தேரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அரசியல் கைதிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்று அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சோபித தேரரின் உறுதித் தன்மையை காட்ட கூடியவாறு, அவரின் தோற்றம் அமைந்துள்ளது. இலங்கையில் முற்று முழுதான மாற்றத்தினை எதிர்பார்த்தவர். ஆவரின் எதிர்பார்ப்பு போன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இலங்கை மக்களின் எதிர்காலம் சிறப்பாக இல்லை. எதிர்காலத்தில் நல்ல விடயங்களை எதிர்பார்க்க முடியாதுள்ளது.
சோபித தேரரின் உடல் தீயுடன் சங்கமிக்கும் போது, இனப்பிரச்சினைக்கும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் தீர்வு கிடைக்க வேண்டும். பொது மக்களின் போராட்டங்கள் ஓயக்கூடாதென்றும், அரசியல் கைதிகள், அனைவரும் ஒன்றாக செல்வோம் என்று திடமான முடிவுகள் இருக்க வேண்டும். அனைவரும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply