ஜி-சாட் 15 செயற்கைகோள் விண்ணில் சீறிப்பாய்ந்தது

31726f58-01bf-48f5-bad7-4371b2c90e16_S_secvpfஇஸ்ரோ தயாரித்துள்ள நவீன தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜி-சாட் 15 செயற்கைகோள், ஏரியன்-5 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான ‘பி.எஸ்.எல்.வி’, ‘ஜி.எஸ்.எல்.வி’ ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. செயற்கைகோள்கள் பொருத்தப்பட்ட ராக்கெட்டுகளை, சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ‘சதீஷ்தவான்’ ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவி வருகிறது.

 

இதன் ஒரு பகுதியாக தகவல் தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிவதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி ‘ஜி.எஸ்.எல்.வி -டி5’ ராக்கெட் மூலம் ‘ஜி- சாட் 14’ செயற்கைகோளையும், கடந்த ஆகஸ்டு 27-ந் தேதி ‘ஜி.எஸ்.எல்.வி -டி5’ ராக்கெட் மூலம் ‘ஜி சாட்-6’ செயற்கைகோளையும் ‘இஸ்ரோ’ தயாரித்து ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவியது. அதனை தொடர்ந்து தற்போது தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றத்தை அறிவதற்காக நவீன தொழில்நுட்பங்களுடன் ‘ஜி-சாட் 15’ என்ற செயற்கைகோளை வடிவமைத்தது.

 

இது தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள ‘கொரு’ ஏவுதளத்தில் இருந்து ‘ஏரியன்-5’ ராக்கெட் மூலம் இன்று காலை 3.04 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டு, சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

 

சுமார் 860 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த செயற்கைகோளின் மொத்த எடை 3164 கிலோவாகும்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply