விஜேதாசவை நீக்க வேண்டும், இல்லையேல் அரசுக்கு ஆபத்து : சரத் பொன்சேகா
நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை அமைச்சு பதவியிலிருந்து நீக்க வேண்டும் என முன்னாள் இராணவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். விஜேதாச ராஜபக்ஷ கண்ணாடி அறையில் இருந்துக்கொண்டு கல்லெறிகின்றார். அவரை உடனடியாக அமைச்சு பதவியிலிருந்து அகற்ற வேண்டும். அவர் ராஜபக்ஷவினருடன் இணைவதற்கு முயற்சிக்கின்றார். அவரை அமைச்சு பதவியிலிருந்து நீக்காவிட்டால் அரசாங்கத்தின் நற்பெயருக்கே ஆபத்து என பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply