பிரான்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் பயணிகள் வெளியேற்றம்
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அந்த விமானத்திற்கு டுவிட்டர் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து புறப்பட தயாராக இருந்த அந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
“நாங்கள் மிரட்டலை எப்போதும் முக்கியத்துவமானதாக கருதுகிறோம். விமானத்தில் தேடுதல் பணியை மேற்கொள்வதற்காக உடனடியாக வெளியேற்றினோம்” என்று நெதர்லாந்து போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக, பிரான்ஸ் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, நெதர்லாந்து அரசு எல்லைகள், விமான நிலையம். ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. பிரான்சின் அண்டை நாடு நெதர்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply