பாரிஸ் நகரில் தாக்குதல்கள் எதிரொலி: அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு விளையாட்டு மைதானம், இசை அரங்கம், உணவு விடுதி என பல இடங்களில் மும்பை தாக்குதல் போன்று தொடர் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த கொடூர தாக்குதல்களில் 120-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதல்களை தொடர்ந்து நெருக்கடி நிலையை அறிமுகம் செய்துள்ள பிரான்ஸ் நாட்டு அரசு, தனது அனைத்து எல்லைகளையும் மூடி விட்டது.
இந்த தொடர் தாக்குதல்கள் உலக அரங்கை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தீவிரவாதிகள் அடுத்தக்கட்டமாக அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை குறிவைக்கக்கூடும் என்ற யூகம் எழுந்துள்ளது.
இதன்காரணமாக அமெரிக்காவில் பல்வேறு நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா நகரங்களை சேர்ந்த அதிகாரிகள் கூறும்போது, “தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பது தொடர்பாக எங்களுக்கு எந்தவொரு உளவுத்தகவலும் வரவில்லை. இருந்தபோதும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ரோந்துப்பணியை முடுக்கி விட்டிருக்கிறோம். பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறோம்” என்றார்.
இதேபோன்று நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply