துனிசியாவில் உளவாளி தலை துண்டித்து படுகொலை
ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு மத்திய சிதி பாவ்ஸித் மாகாணத்தில் உள்ள 16 வயது சிறுவன் ஒருவன் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து ராணுவத்துக்கு உளவு தகவல்களை கூறி வந்ததாக தெரிகிறது. இது குறித்து தீவிரவாதிகளுக்கு தெரிந்து விட்டது. நேற்று முன்தினம் அந்த சிறுவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது தீவிரவாதிகள் அவனை பிடித்துச்சென்று தலையை துண்டித்து படுகொலை செய்தனர். துண்டித்த தலையை ஒரு பையில் போட்டு, சிறுவனின் நண்பன் மூலம் அவனது வீட்டுக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம், துனிசியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply