பாரிஸ் தாக்குதல்: ஈபிள் டவர், லோவுர் அருங்காட்சியகம், டிஸ்னிலேண்ட் மூடல்
பாரிசில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 127 பேர் பலியானதை அடுத்து ஈபிள் டவர், லோவுர் அருங்காட்சியகம் டிஸ்னிலேண்ட் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 128 பேர் பலியாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 80-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.
தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பாரிஸ் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர், லோவுர் அருங்காட்சியகம், டிஸ்னிலேண்ட் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply