ஜெர்மனி எல்லையருகே பிரான்ஸ் நாட்டு ரெயில் கால்வாய்க்குள் பாய்ந்தது : 5 பேர் பலி

indexபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய மூன்று தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் அந்நாட்டின் நாற்புற எல்லைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் – ஜெர்மனி எல்லையோரம் உள்ள ஒரு கால்வாய்க்குள் அதிவேக ரெயில் கவிழ்ந்த விபத்தில் ஐந்து பேர் பலியானார்கள்.

 

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரை கிழக்கே உள்ள ஸ்டிராஸ்போர்க் நகரோடு இணைக்கும் வகையில் புதிய அதிவிரைவு ரெயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் பாதையில் நேற்று ரெயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. புதிய தண்டவாளத்தின் மீது வேகமாக ஓடிய சோதனை ரெயில், ஜெர்மனி எல்லையோரம் உள்ள எக்வெர்ஷிய்ம் என்ற இடத்தின் வழியாக அமைக்கப்பட்டுள்ள ஒரு கால்வாய் பாலத்தை கடந்தபோது, திடீரென தண்டவாளத்தை விட்டு, விலகிச் சென்று கால்வாக்குள் பாய்ந்தது.

 

பாய்ந்த வேகத்தில் ரெயிலின் சில பெட்டிகள் தீபிடித்து எரிந்தன. இந்த விபத்தில் அந்த ரெயிலில் சென்ற ரெயில்வேதுறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் ஐந்து பேர் பலியாகினர். ஏழு பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த விபத்து, சோதனை ரெயிலின் அதிக வேகத்தால் ஏற்பட்டதா? அல்லது, தீவிரவாதிகளின் சதிவேலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply