வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி கடலில் தத்தளித்த மக்கள் கடற்படையினரால் காங்கேசந்துறைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.
வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து 31 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நேற்று வந்ததாகப் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. 13 ஆண்கள், 9 பெண்கள், 6 சிறுவர்கள், 3 கைக்குழந்தைகள் இவ்வாறு இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வந்தவர்களாவர். கடற் பிரதேசக் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர் இரு வள்ளங்கள் வருவதனைக் கண்டு அவற்றினைத் தடுத்து நிறுத்தி விசாரித்த போதே தாம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பி வருவதாகத் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் கட்டைக்காடு, பரந்தன், கிளிநொச்சி, சம்பியன்பற்று பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கிய கடற்படையினர் பின்னர் காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply