வடக்கில் உள்ள சகல மருத்துவ மனைகளும் அபிவிருத்தி செய்யப்ப்டும்:அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவத் துறையை மேம்படுத்தும் திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென ஜப்பானிய அரசாங்கம் மேலும் 1.5 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான சுகாதார தேவைகளில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதுடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர்களில் 500 பேரை கிழக்கிற்கு அனுப்பியுள்ளதுடன் தாதியர் அறுநூறு பேரையும் அம்மாகாணங்களுக்கு சேவைக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவிக்கையில்: வடக்கு, கிழக்கு மாகாண சுகாதார நடவடிக்கைகளில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்திவருகிறது. இது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவைகளில் எதுவித உண்மையுமில்லை.
அரசாங்கம் கிழக்கு மாகாணத்தை மீட்டு அங்கு முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவமளித்து வருவதுடன் அங்குள்ள சகல மருத்துவமனைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இதேபோன்று வடக்கிலும் சகல மருத்துவ மனைகளையும் அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடக்கில் பாதிக்கப்படுவோரின் நலன் கருதி அநுராதபுரம் பொது வைத்தியசாலை முழுமையான அபிவிருத்திக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அங்கு சத்திரசிகிச்சைக்கான விசேட பிரிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply