இராணுவப் பகுதிக்குச் சென்றோர் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு!
புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று முன்தினம் (மார். 21) புலிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பதினான்கு பேர் படு காயமடைந்தனர் என தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்தது. இவ்வாறு காயமடைந்தவர்களில் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளூர் பணியாளரான சுதர்ஷனி தர்மிளா என்பவரும் அடங்குவார் என்றும் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனரெனவும் அந்த நிலையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் (மார். 21) புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து 592 பேரும் நேற்றைய தினம் 899 பேரும் பாதுகாப்பு தேடி இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply