தயவு செய்து உள்ளக முரண்பாடுகளை ஊடகங்களில் பேச வேண்டாம்! : விக்கி, சுமந்திரனிடம் மாவை கோரிக்கை
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கருத்து முரண்பாடுகளை ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி விவாதிப்பதை கைவிட வேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் அவற்றை நியாயப்படுத்தியும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு வெளியிட்டு வரும் கருத்துக்களால் எழுந்துள்ள முரண்பாடுகள் குறித்து fகருத்து வெளியிட்டுள்ள அவர்,
வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பாக ஊடங்களில் இருவரும் பரஸ்பரம் கருத்துக்களை வௌியிட்டு விவாதம் நடத்தி வருகின்றார்கள்.
தற்போதைய நிலையில் இவ்வாறு ஊடகங்களில் பகிரங்க விவாதங்களை மேற்கொள்வது சாலப்பொருத்தமானதொன்றல்ல. அவர்கள் தமக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி அதற்குரிய தீர்வைக் காணவேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply