தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை : மங்கள சமரவீர

mangalaமுன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது 116 அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய முடி­யு­மாயின் ஏன் மீத­முள்­ள­வர்­களை விடு­தலை செய்­ய­மு­டி­யாது. அர­சியல் கைதி­களை விடு­விப்­பதில் தவறில்லை. அவர்­களை சமூ­க­ம­யப்­ப­டுத்த வேண்டும் என வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். அத்­துடன் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை இன்னும் வைத்­தி­ருப்­பதில் அர்த்தம் கிடை­யாது. குறித்த தடைச்­சட்­டத்தை நீக்­கி­விட்டு சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு ஏற்றால் போல் புதிய சட்டம் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைமை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­விய­லாளர் மாநாட்டின் போதே அமைச் சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தமி­ழீழ விடு­தலை புலிகள் இயக்­கத்தில் இருந்­த­மைக்­காக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் பலர் கைது செய்­யப்­பட்­டனர். இதன்­பி­ர­காரம் இது­வ­ரைக்கும் 216 அர­சியல் கைதிகள் சிறைச்­சா­லை­களில் உள்­ளனர். இவற்றில் 52 பேருக்கு இது­வ­ரைக்கும் வழக்கு தாக்கல் செய்­யப்­ப­ட­வில்லை. மேலும் 116 பேருக்கு வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருப்­பினும் அவர்­க­ளது வழக்கு விசா­ர­ணைகள் 12 வரு­டத்தை தாண்­டி­யுள்­ளது. ஆகவே இவர்­களை இதற்கு மேலும் சிறைச்­சா­லை­களில் வைத்­தி­ருப்­பதில் எந்­த­வொரு பலனும் இல்லை.

இருந்த போதிலும் அரங்­க­லவில் பல பிக்­கு­களை கொன்று குவித்த கருணா அம்மான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சியில் அமைச்­ச­ராக செயற்­பட்டார். அதே­போன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உப தலை­வ­ரா­க­வும பதவி வகித்தார்.

இதற்கு அப்பால் கே. பி என்ற குமரன் பத்­ம­நாதன் கொழும்பில் மிகவும் ஆடம்­ப­ர­மாக வாழ்ந்து வந்தார். ஆனால் எந்­த­வொரு குற்­றமும் அறி­யாத அப்­பாவி இளை­ஞர்கள் சிறையில் தடுத்து வைக்­கப்­ப­டு­வதில் எந்­த­வொரு பிர­யோ­சனமும் இல்லை. இவர்­களை சமூ­க­ம­யப்­ப­டுத்த வேண்டும். ஆகவே அர­சியல் கைதி­களை விடு­விப்­பது ஒரு­போதும் பிழை­யா­காது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது 116 அர­சியல் கைதி­க­ளுக்கு விடு­தலை வழங்­கப்­பட முடி­யு­மாயின் ஏன் எமது அர­சாங்­கத்­தினால் கைதி­களை விடு­தலை செய்ய முடி­யாது. மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் அமைச்­ச­ராக பதவி வகித்த ஜீ.எல்.பீரிஸ் இதனை அறி­யாமல் இருந்­துள்ளார். இதே­வேளை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை இதற்கு மேலும் வைத்­தி­ருப்­பதில் எந்தவொ­வரு அர்த்­தமும் கிடை­யாது. குறித்த தடைச்­சட்­டத்தை நீக்­கி­விட்டு சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு ஏற்றால் போல் புதிய சட்டம் உரு­வாக்­கப்­பட வேண்டும். அதற்கு அர­சாங்கம் தயாராகி வருகின்றது.

அதேபோன்று காணாமல் போ னோர் தொடர்பில் இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் அமைப்பின் குழுவிற்கு சாட்சியமளிப்பவர் களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட் டமை தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply