பிரதமர் மோடி வீட்டின் அருகே ‘தற்செயலாக’ வெடித்த துப்பாக்கி: விரிவான விசாரணைக்கு உத்தரவு

modi homeபிரதமர் நரேந்திர மோடியின் வீட்டின் அருகே நேற்று இரவு தற்செயலாக துப்பாக்கி வெடித்தது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் ஜடின் நர்வால் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம், எண் 7 ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ளது. நேற்று இரவு 8.30 மணியளவில் பிரதமர் வீட்டின் வெளியே, திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. துப்பாக்கியிலிருந்து அடுத்தடுத்து மூன்று தோட்டாக்கள் வெடித்த சத்தம் கேட்டுள்ளது. சத்தம் வந்த திசையை நோக்கி பாதுகாப்புப் படையினர் உடனடியாக விரைந்தனர்.

அப்போது, காவல் கட்டுப்பாட்டு அறை ஊழியர் ஒருவர் போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கும் போது, தவறுதலாக அவர் வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியின் டிரிகரில் கை பட்டு, வெடித்தது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், பணியில் இருந்த அந்த நபர் உடனடியாக விடுவிக்கப்பட்டார். சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply