கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை
ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் மீன்வளம் நிறைந்து காணப்படும் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சிறிய ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளில் ஏறி இங்கு வந்து மீன் பிடிக்கக்கூடாது என்று எச்சரித்தனர்.
மேலும் படகுகளில் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் கடலில் வீசினர். வலைகளையும் சேதப்படுத்தினர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கியதோடு பெனிட்டோ என்பவருக்கு சொந்தமான ஒரு படகு உள்பட 3 படகுகளையும், அதில் இருந்த 14 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். இதனை பார்த்த மற்ற மீனவர்கள் அவசர அவசரமாக பாதியிலேயே கரை திரும்பினர். சிறை பிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது. கடந்த வாரம் மத்திய–மாநில அரசுகளின் நடவடிக்கையால் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 126 தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்த நிலையில் தற்போது 14 மீனவர்களை சிறைபிடித்து சென்றது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply