டைம் இதழின் ஆண்டின் சிறந்த மனிதர் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் மோடி, அம்பானி, சுந்தர் பிச்சை
டைம் பத்திரிகையின் இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருதுக்கான பரிசீலனைப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி, கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் இடம்பிடித்திருக்கின்றனர்.அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்’ பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சிறந்த மனிதரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் யார் என்பது டிசம்பரில் வெளியிடப்படும் நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை நவீனப்படுத்தவும், அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கவும்,மோடி முயற்சிப்பதாக டைம் இதழ் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுக்கான டைம் பட்டியலிலும் பிரதமர் மோடி இடம்பெற்றிருந்த நிலையில், ஆண்டின் சிறந்த மனிதராக அதன் ஆசிரியர் குழுவால் மோடி தேர்வு செய்யப்படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply