காஷ்மீர் பிரச்சனையை இந்தியாவுடன் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்: பாக். தளபதியிடம் அமெரிக்கா திட்டவட்டம்
காஷ்மீர் பிரச்சனையை இந்தியாவுடன் பேசி பாகிஸ்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதில் நாங்கள் தலையிட மாட்டோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் நாட்டு ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியிடம் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார். அப்போது, இந்தியா – பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் தொடர்ந்து நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையையும், வன்முறையையும் தணிக்கும் வகையில் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இந்தியாவுடன் பேசி பாகிஸ்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இதில் நாங்கள் தலையிட மாட்டோம் என ஜான் கெர்ரி தெரிவித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி இன்று தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply