பசு மாட்டை கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை: உத்தரகாண்ட் முதல்–மந்திரி
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்–மந்திரி ஹரீஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அரித்துவாரில் நடந்த விழா ஒன்றில் முதல்–மந்திரி ஹரீஷ் ராவத் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:– உத்தரகாண்ட் மாநிலத்தில் பசுக்களை பாதுகாக்க மாநில அரசு எதையும் செய்யத் தயங்காது. உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டுமே பசுக்களை பாதுகாக்க இடமும், உணவும் வழங்கப்படுகிறது. உத்தரகாண்டில் பசு மாடுகளை கொல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் இந்தியாவின் மிகப் பெரிய எதிரிகள் ஆவார்கள். பசுக்களை கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை.
இவ்வாறு முதல்–மந்திரி ஹரீஷ் ராவத் பேசினார்.
காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் ஹரிஷ் ராவத்தின் பேச்சு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாட்டிறைச்சி சாப்பிடலாம் என்ற ஆதரவு நிலையை எடுத்துள்ள காங்கிரஸ் கடந்த மாதம் இது தொடர்பான விவாதங்களை நாடெங்கும் உருவாக்கியது.
இதனால் மாட்டிறைச்சி, சகிப்புத்தன்மை குறைந்தது போன்ற விவகாரங்கள் நாடெங்கும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் கட்சி கொள்கைக்கு எதிராக உத்தரகாண்ட் முதல்–மந்திரி ராவத் கருத்து தெரிவித்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply