மாலி ஓட்டலில் 170 பேரை பிணைக்கைதிகளாக பிடித்த தீவிரவாதிகள்: ராணுவத்தினருடன் கடும் துப்பாக்கிச் சண்டை
மாலி நாட்டின் தலைநகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்குள் இன்று நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த சுமார் 170 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும், ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அங்கு கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்துவருவதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலி நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் கடந்த மூன்றாண்டுகளாக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது, பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடிக்கும் இந்த கும்பல், அரசிடம் பணம்கேட்டு மிரட்டி வருகின்றது. பணம் தராவிட்டால் பிடித்து வைத்திருக்கும் மக்களை ஈவிரக்கமின்றி இவர்கள் கொன்றுகுவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாலி நாட்டின் தலைநகரான பமாக்கோ நகரில் உள்ள ராடிசன் ஓட்டலுக்குள் இன்று புகுந்த தீவிரவாதிகள் அங்கு ஏழாவது மாடியில் தங்கியிருந்த சுமார் 170 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்க ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
பதிலுக்கு உள்ளே இருக்கும் தீவிரவாதிகளும் துப்பாக்கிகளால் திருப்பிச் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த ஓட்டல் இருக்கும் பகுதி முழுவதும் போர்க்களம்போல் காணப்படுவதாக அங்கிருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பு தாக்குதலில் ஐந்துபேர்வரை பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply