மாலியில் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட 20 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு – பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
மாலி நாட்டின் தலைநகரான பமாக்கோ நகரில் உள்ள ராடிசன் ஓட்டலுக்குள் இன்று புகுந்த தீவிரவாதிகள் அங்கு ஏழாவது மாடியில் தங்கியிருந்த சுமார் 30 ஓட்டல் ஊழியர்கள் உட்பட சுமார் 100 பேருக்கு மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர். அவர்களை மீட்க ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு உள்ளே இருக்கும் தீவிரவாதிகளும் துப்பாக்கிகளால் திருப்பிச் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். மாலி வீரர்களுடன், ஐ.நா. மற்றும் பிரெஞ்சு சிறப்பு படை வீரர்களும் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டனர். இந்த சண்டையால், அந்த ஓட்டல் இருக்கும் பகுதி முழுவதும் போர்க்களம்போல் காணப்பட்டது.
பிணைக்கைதிகளில் சிலரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதையடுத்து, ஓட்டலுக்குள் புகுந்த பாதுகாப்பு படையினர், 20 இந்தியர்கள் உள்ளிட்ட பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்டனர். தற்போது கிடைத்துள்ள தகவல்படி ஓட்டலில் இருந்து 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐ.நா. ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply