உலகத் தமிழர் பேரவை அருட்தந்தை இமானுவேல் இலங்கை வருவதில் சட்டசிக்கல்

MANGALAஉலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் இலங்கைக்கு வருவதற்கு FATHERசட்டரீதியான சிக்கல் காணப்படுவதால் அவருக்கு சட்டரீதியான நிவாரணமொன்றைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் கூறினார். சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தடைசெய்யப்பட்ட உலகத் தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் இலங்கைக்கு வரமுயற்சிப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தார்.

பிரிக்கப்படாத ஒன்றிணைந்த இலங்கைக்கு ஆதரவு வழங்கும் எந்தவொரு நபரும் இலங்கைக்கு வந்துசெல்ல முடியும். அருட்தந்தை இமானுவேல் இலங்கை வருவதற்கு சட்டச்சிக்கல் உள்ளது. எனவே அவருக்கு சட்டரீதியான நிவாரண மொன்றைப் பெற்றுக்கொடுப்பது பற்றி அரசு கவனம் செலுத்தியுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் எந்தவொரு இலங்கையரும் நாடு பிரிக்கப்படக்கூடாது, ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தால் இலங்கைக்கு வந்து செல்ல முடியும். கடந்த அரசாங்கத்தால் புலம்பெயர்ந்து வாழும் நபர்களும் அமைப்புக்களும் தடை செய்யப்பட்டிருந்தன.

புலி எனக் கூறி தடைசெய்யப்பட்டவர்களில் உயிரிழந்து ஐந்து ஆறு வருடங்கள் கடந்தவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்தத் தடையானது அரசியல் தேவைக்காக ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.இவ்வாறான நிலையில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் நபர்களின் உண்மையான நிலைப்பாடு மற்றும் அவர்களின் தற்போதைய நிலை என்பவற்றை ஆராய்ந்து தடைகளை நீக்குவது குறித்து கவனம் செலுத்தியிருப்பதாகவும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply