அமைச்சரவைக் கூட்டங்களின் போது தொலைபேசிகளுக்கு தடை விதிக்க வேண்டும்: தலதா அதுகோரல
அமைச்சரவைக் கூட்டங்களின் போது தொலைபேசி பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டுமென அமைச்சர் தலதா அதுகோரல கோரியுள்ளார். அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட முன்னதாகவே சிலருக்கு தெரிந்துவிடுகின்றது. அமைச்சரவையின் இரகசியங்களை பேணிப் பாதுகாத்துக்கொள்ள தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும். கூட்டங்களுக்கு செல்லிடப் பேசிகளை அமைச்சர்கள் எடுத்துச் செல்வதனை தடை செய்ய வேண்டும்.
சில அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிடும் கருத்துக்களை வெளிநபர்கள், கேட்டுக்கொள்ள செல்லிடப்பேசிகளின் ஊடாக வேறு சில அமைச்சர்கள் ஆவண செய்து வருகின்றனர்.இவ்வாறு சில அமைச்சர்கள் செய்யும் நடவடிக்கையானது வெட்கப்பட வேண்டியதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறு தொலைபேசிகளை எடுத்துச் செல்ல தடை விதிப்பது அமைச்சர்களின் கௌரவத்திற்கு பங்கமாக அமையும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை இரகசியங்களை பாதுகாப்பது அனைவரினதும் கூட்டு பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply