சீனாவில் 6 வயது சிறுவனுக்கு சிறுநீரக ஆபரேசன் செய்த ரோபோ

chinaசீனாவில் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் சிறுநீர் கழிப்பதில் மிகவும் சிரமப்பட்டான். எனவே அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் சிபாரிசு செய்தனர். நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ‘ரோபோ’ மூலம் இந்த ஆபரேசன் நடத்த முடிவெடுக்கப்பட்டது. குவாங்கோ நகரில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து திட்டமிட்டபடி அந்த சிறுவனுக்கு ‘ரோபோ’ ஆபரேசன் செய்தது. பிரமாண்ட திரைக்கு முன் அமர்ந்த டாக்டர்கள் அங்கிருந்தபடி ஆபரேசன் தியேட்டரில் படுத்திருந்த சிறுவனுக்கு ‘ரோபோ’ மூலம் ஆபரேசன் செய்தனர்.

சுமார் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்த இந்த ஆபரேசன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மருத்துவ உலகில் ‘ரோபோ’ மூலம் முதன் முறையாக இந்த ஆபரேசன் நடத்தப்பட்டுள்ளது.

லேப்ராஸ்கோபிக் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த ஆபரேசன் வழக்கத்தை காட்டிலும் குறைந்த நேரத்தில் முடிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply