2020 வரை இந்த அரசை எவராலும் அசைக்க முடியாது : ஜனாதிபதி உறுதி
எதிர்வரும் 2020 வரை இந்த அரசை எவராலும் அசைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தற்பொழுது ஒளிபரப்பாகும் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த ஜனவரி 8ஆம் திகதி முதல் இன்று வரை உள்ள குறுகிய காலப்பகுதியில் கடந்த நாற்பது ஐம்பது வருடங்களாக வெறும் பேச்சளவில் மாத்திரம் காணப்பட்ட நல்லாட்சிக்கான அடித்தாலங்கள் பல நிறுவப்பட்டுள்ளன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் செயலளவில் ஆரம்பமாகியுள்ளன, அதேபோன்று இன்றுவரை ஒன்பது சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன, உயர்மட்ட செலவுகள் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளன. இவைகள் சிலரது கண்களுக்கு விளங்குவதில்லை.
இந்த அரசு உறுதியான அரசு அல்ல, இந்த அரசாங்கத்தினால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. விரைவில் ஆட்சி மாற்ற ஏற்படும் போன்ற கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
நான் ஒரு விடையத்தை மற்றும் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த தேசிய அரசு உறுதியானது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை இந்த அரசாங்கத்தை எவராலும் மாற்ற முடியாது. அதன் பின்னர் வரும் பொதுத் தேர்தலில் மக்கள் விருப்பத்திற்கு அமைய அரசாங்கம் அமையும். அதுவரை தற்போதைய அரசு சேவையாற்றும் என்பதை உறுதியாக் கூறிகொள்கிறேன் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் உட்பட ஆட்சி நல்லாட்சி மாற்றத்திற்கு உழைத்த கட்சிகளின் தலைவர்கள் சிலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply