வெடிகுண்டு மிரட்டல்: அமெரிக்காவில் இருந்து இஸ்தான்புல் நகருக்கு சென்ற விமானம் கனடாவில் அவசர தரையிறக்கம்
அமெரிக்காவில் இருந்து துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நோக்கி 256 பேருடன் சென்ற துருக்கி நாட்டு விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து கனடா நாட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப். கென்னடி விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்றிரவு 10.50 மணியளவில் அந்த விமானம் இஸ்தான்புல் நகரை நோக்கி புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர் அந்த விமானத்தை தகர்க்க வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு மிரட்டல் அழைப்பு வந்தது.
இதையடுத்து, அருகாமையில் உள்ள ஏதாவது விமான நிலையத்தில் உடனடியாக தரையிறங்கும்படி விமானிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கனடாவில் உள்ள ஹலிபெக்ஸ் ஸ்டான்பீல்ட் நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக இறக்கி விட்டபின்னர், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்களின் உதவியுடன் அந்த விமானம் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு வருவதாக கனடா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply