அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் பட்டியல்: ஜெயலலிதா அறிவிப்பு
அ.தி.மு.க. மாநில புதிய நிர்வாகிகள் பட்டியலை ஜெயலலிதா அறிவித்துள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந்தேதி வெளியிடப்பட்டது. பொதுச்செயலாளர் பதவிக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா பெயரை கட்சியினர் முன்மொழிந்தனர். இதைத்தொடர்ந்து ஆகஸ்டு 29-ந் தேதி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக போட்டியின்றி ஒரு மனதாக ஜெயலலிதா 7-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அ.தி. மு.க.வின் மாநில, மாவட்ட மற்றும் பல்வேறு அணி பிரிவுகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய மாவட்ட செயலாளர்களும், வட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டார்கள். தற்போது மாநில நிர்வாகிகளின் பட்டியலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக, கட்சியின் சட்ட திட்ட விதிமுறைகளின்படி, அ.தி.மு.க.வின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால் நான் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
பொதுச்செயலாளர்-ஜெயலலிதா (முதல்-அமைச்சர்)
தலைமைக் கழக நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க் காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
அவைத்தலைவர்-இ. மதுசூதனன், அமைப்பு செயலாளர்- சி.பொன்னையன். பொருளாளர்-ஓ.பன்னீர்செல்வம் (ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர், நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர்), ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்-நத்தம் விஸ்வ நாதன் (திண்டுக்கல் மாவட்ட செயலாளர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர்).
ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்-ஆர்.வைத்திலிங்கம் (தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர்), ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்- எடப்பாடி கே.பழனிசாமி (சேலம் புறநகர் மாவட்ட செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்), தலைமை நிலையச்செயலாளர், ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர்-பி.பழனியப்பன் (உயர் கல்வித்துறை அமைச்சர்).
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச்செயலாளர்-தமிழ்மகன் உசேன் (தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்), அமைப்புச்செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் (தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர்), அமைப்பு செயலாளர்-பண்ருட்டி ராமச்சந்திரன், கொள்கை பரப்புச்செயலாளர்-மு. தம்பிதுரை (அ.தி. மு.க. மக்களவை துணை சபாநாயகர்). அமைப்புச்செயலாளர்-செ. செம்மலை.
விவசாயப் பிரிவுத் தலைவர்- துரை கோவிந்தராஜன், இலக் கிய அணிச்செயலாளர்-பா.வளர்மதி (சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர்), அண்ணா தொழிற் சங்கப்பேரவை தலைவர்-தாடி ம.ராசு, அண்ணா தொழிற்சங்கப்பேரவைச்செயலாளர்- சின்னசாமி, எம்.எல்.ஏ., சிறுபான்மையினர் நலப் பிரிவுத்தலைவர்-ஜஸ்டின் செல்வராஜ்.
சிறுபான்மையினர் நலப்பிரிவுச்செயலாளர்-அன்வர்ராஜா எம்.பி., ஜெயலலிதா பேரவைச்செயலாளர்-ஆர்.பி. உதயகுமார் (வருவாய்த்துறை அமைச்சர்), அமைப்புச்செயலாளர்-எஸ். கோகுல இந்திரா (மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்), அமைப்புச்செயலாளர்-செல்வராஜ் எம்.பி. (மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர்).
மருத்துவ அணிச்செயலாளர்-டாக்டர் வேணுகோபால் எம்.பி. (பாராளுமன்ற குழுத்தலைவர்), வழக்கறிஞர் பிரிவுத்தலைவர்-சேதுராமன், வழக்கறிஞர் பிரிவுச்செயலாளர்-நவநீதகிருஷ்ணன் எம்.பி.,(மாநிலங்களவை குழுத்தலைவர்), அமைப்புச்செயலாளர்-ராஜூ (நாமக்கல் மாவட்டம்), மீனவர் பிரிவுச் செயலாளர்-கே.கே.கலைமணி. தேர்தல் பிரிவுச்செயலாளர்-உடுமலை கே.ராதாகிருஷ் ணன் (தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர்).
அமைப்புச்செயலாளர்- பாப்பாசுந்தரம், எம்.எல்.ஏ., (குளித்தலை தொகுதி), மீனவர் பிரிவு இணைச் செயலாளர்- ஜெனிபர் சந்திரன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச்செயலாளர்-கமலகண்ணன், கொள்கை பரப்பு துணைச்செயலாளர்-நாஞ்சில் சம்பத், மகளிர் அணிச்செயலாளர்-சசிகலா புஷ்பா எம்.பி. (மாநிலங்களவை குழு கொறடா).
இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர், மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்-ப. குமார் எம்.பி. (மக்களவை குழு துணைத்தலைவர்), மாணவர் அணிச்செயலாளர்-விஜயகுமார் எம்.பி., (மக்களவை குழு கொறடா), தகவல் தொழில்நுட்பப்பிரிவுச்செயலாளர்- அஸ்பயர் சுவாமிநாதன்.
எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச்செயலாளர்- அலெக்சாண்டர், விவசாய பிரிவுச்செயலாளர்-வைரமுத்து, எம்.எல்.ஏ. (திருமயம் தொகுதி), அமைப்புச்செயலாளர்-கோபால் எம்.பி. (நாகப்பட்டினம் தொகுதி), அமைப்புச்செயலாளர்-எஸ்.வளர்மதி, எம்.எல்.ஏ. (ஸ்ரீரங்கம் தொகுதி), அமைப்புச்செயலாளர்-ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. (தூத்துக்குடி தொகுதி).
கட்சி தொண்டர்கள் தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.
மாநில நிர்வாகிகள் பட்டியலில் தே.மு.தி.க.வில் இருந்து அ.தி.மு.க.வில் இணைந்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.வளர்மதிக்கும் அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விரைவில் அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply