ஜனவரி மாதம் முதல் GTVயில் துப்பாக்கி விற்பனை செய்யப்படுமாம்
தனிமனிதப் பாதுக்காப்புக்காக உரிமம் பெற்று வாங்கிவைக்கும் துப்பாக்கிகளை, பாதுகாப்பான இடங்களின் வைக்காமல்போவதால், விளையாடும் குழந்தைகள் தவறி தம்மைத் தாமே சுட்டுக்கொண்டு அவ்வப்போது இறந்துபோகின்றனர். கல்லூரி, பொது இடம் என மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சகட்டுமேனிக்கு பலரைக் கொல்வதும் தொடர்ந்துகொண்டே வருகின்றது.இந்தத் துப்பாக்கி கலாச்சாரத்தைப் பெருக்கும் விதமாக, வீட்டிலிருந்தபடியே விருப்பமான துப்பாக்கிக்களை வாங்கிக்கொள்ள ‘டெலி ஷாப்பிங்’ தொலைக்காட்சி சேனல் ஒன்று வரும் ஜனவரி மாதத்திலிருந்து அமெரிக்காவில் செயல்பட இருக்கின்றது. இது கன் டி.வி அல்லது ஜீ டி.வி.(GunTV or GTV) என அழைக்கப்படும்.
துப்பாக்கி போன்ற ஆயுதங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தத் தொலைக்காட்சியின் மூலம் தமது புதிய தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி விற்பனையை பெருக்கிக்கொள்ளலாம். இந்த சேனல் ஐந்து மணிநேரத்துக்கு மட்டும் முதலில் செயல்பட இருக்கின்றது.
இந்த சேனலின் இணை நிறுவனர் வாலெரி கேசில் தமது சேனல் மூலமாக துப்பாக்கிக்கான தேவை தீர்க்கப்படுமே தவிர, புதிதாக சந்தை உருவாக்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply